• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

செமிகண்டக்டர் சிப்களை உருவாக்க முயலும் டிரம்ப் – ஆசிய நாடுகளை எதிர்கொள்ள போராடும் அமெரிக்கா

Byadmin

Apr 16, 2025


சிப்கள்
படக்குறிப்பு, நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கியப் போர்க்களமாகவே உள்ளன.

பல ஆண்டுகளாக அமெரிக்கா சிப் உற்பத்தியை “தவற விட்டுவிட்டது” . இதன் காரணமாக சீனா மற்றும் பிற ஆசிய நாடுகள் வேகமாக முன்னேறத் தொடங்கின.

அப்போது அமெரிக்க வர்த்தகச் செயலாளராக இருந்த ஜினா ரைமண்டோ, 2021 இல் எனக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கிய போர்க்களமாகவே உள்ளன.

இந்நிலையில், பிற நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து, முழுமையாக வெற்றி பெற்ற ஒரு மிக நுட்பமான, சிக்கலான உற்பத்தி முறையை வேகப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

By admin