• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

செம்மணியில் இதுவரை 122 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! – இன்று புதிதாக 4 அடையாளம் (படங்கள் இணைப்பு)

Byadmin

Aug 1, 2025


யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 7 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணிப் பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட மனிதப் புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்டப் பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 27 ஆவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 36 நாட்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதுவரையில் 122 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 112 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

By admin