• Mon. Sep 1st, 2025

24×7 Live News

Apdin News

செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்

Byadmin

Sep 1, 2025


செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 07ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 48 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 10  எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம்  மதியத்துடன் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் , நாளைய தினம் திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளது.

The post செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் appeared first on Vanakkam London.

By admin