• Thu. Oct 17th, 2024

24×7 Live News

Apdin News

செரியன், கேரளா: இந்திய ராணுவ வீரரின் உடல் 56 ஆண்டுக்குப் பிறகு மீட்கப்பட்டதுஎப்படி?

Byadmin

Oct 17, 2024


செரியன், கேரளா, இந்திய ராணுவ வீரர்

பட மூலாதாரம், Defence PRO, Thiruvananthapuram

56 ஆண்டுகள், 8 மாத காத்திருப்புகளையும் ஏக்கத்தையும் முடிவுக்கு கொண்டுவந்தது ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு.

கேரளாவில் பத்தனம்திட்டாவில் அமைந்திருக்கும் காவல்நிலையத்தில் இருந்து காவலர் ஒருவர் தாமஸை போனில் அழைத்து, அவர் அண்ணன் செரியனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.

1968-ஆம் ஆண்டு செரியன் உட்பட 102 பேர் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் பயணித்தனர். இமயமலைப் பகுதியில் முதன்முறையாக ராணுவப் பணிக்காக பயணித்தார் 22 வயதான செரியன்.

மோசமான காலநிலை காரணமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானது. ஹிமாச்சல பிரதேசத்தை இந்தியாவின் காஷ்மீருடன் இணைக்கும் ரோஹ்டாங்கை தாண்டிய போது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

By admin