• Sun. Aug 24th, 2025

24×7 Live News

Apdin News

செர்ஜியோ கோர்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் இவரை நியமித்தது ஏன்? முழு பின்னணி

Byadmin

Aug 24, 2025


இந்தியாவுக்கான அமெரிக்க தூதர், செர்ஜியோ கோர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கென்னடி மையத்தில் உரையாற்றும் செர்ஜியோ கோர் (கோப்புப் படம்)

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22), செர்ஜியோ கோரை இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதராகவும் நியமிக்கப் போவதாகக் கூறினார்.

டிரம்ப் நிர்வாகத்தில், கோர் தற்போது ‘அதிபர் பணியாளர்கள் நியமன தலைவராக’ (Head of Presidential Personnel Appointments) உள்ளார். தூதராக அவரது நியமனம் இன்னும் அமெரிக்க செனட் சபையால் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்தியா அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பான சர்ச்சையில் ஈடுபட்டுள்ள சமயத்தில், கோர் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படுகிறார். மறுபுறம், இந்தியாவும் சீனாவும் நெருக்கமாகி வருவதாகத் தெரிகிறது.

By admin