• Wed. Apr 2nd, 2025

24×7 Live News

Apdin News

செல்போனில் யுபிஐ சேவை நிறுத்தப்படுமா? – ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய 6 மாற்றங்கள்

Byadmin

Mar 31, 2025


யுபிஐ , வருமானவரி உச்சவரம்பு, வருமான வரிக்கணக்கு தாக்கல், வங்கி மினிமம் பேலன்ஸ் , குறைந்த பட்ச இருப்புத் தொகை, ஏடிஎம் கட்டணம், ஜிஎஸ்டி, ஓய்வூதியம், செபி, SIF

பட மூலாதாரம், Getty Images

இன்று 2024-25 நிதியாண்டின் கடைசி நாள். புதிய நிதியாண்டு 2025-26 ஏப்ரல் 1ம் தேதியான நாளை தொடங்குகிறது. ரிசர்வ் வங்கி முதல் தனியார் நிறுவனங்கள் வரை நிதி தொடர்பான மாற்றங்கள் அமலுக்கு வரும் நாள் என்பதால் இந்த நாள் மிக முக்கியானது.

2025-26 நிதியாண்டில் வருமானவரி குறித்த மாற்றம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட வரம்புக்குள் சம்பளம் பெறுபவர்களின் வருமான வரி குறையும். யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. ஓய்வூதியத் திட்டங்களிலும் மாற்றம் இருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வரிசெலுத்துவோர், மூத்த குடிமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் யுபிஐ மூலமாக பணப்பரிமாற்றம் செய்வோரும் இந்த மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். ஏப்ரல் 1 2025 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் குறித்து காணலாம்.

வருமான வரிக்கான வரம்புகள் மாற்றியமைப்பு

யுபிஐ , வருமானவரி உச்சவரம்பு, வருமான வரிக்கணக்கு தாக்கல், வங்கி மினிமம் பேலன்ஸ் , குறைந்த பட்ச இருப்புத் தொகை, ஏடிஎம் கட்டணம், ஜிஎஸ்டி, ஓய்வூதியம், செபி, SIF

பட மூலாதாரம், Getty Images

புதிய வருமான வரி முறையில், வருமான வரிக்கான வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டன.

By admin