• Thu. Aug 7th, 2025

24×7 Live News

Apdin News

செல்லப்பிராணிகளைக் கொடுங்கள் – வேட்டை விலங்குகளுக்கு உணவாகக் கேட்கும் காட்டுயிர் சரணாலயம்

Byadmin

Aug 7, 2025


மக்கள் செல்லப்பிராணிகளை தானமாக வழங்குமாறு டென்மார்க்கில் உள்ள ஒரு காட்டுயிர் சரணாலயம் கேட்டுள்ளது. அவைகள் சரணாலயத்தில் உள்ள வேட்டை விலங்குகளுக்கு உணவாக கொடுக்கப்படும்.

கோழிகள், முயல்கள் மற்றும் கினிப் பன்றிகளை நன்கொடையாகக் கேட்டுள்ளது. அவை பயிற்சி பெற்ற ஊழியர்களால் வலியின்றி கொல்லப்படும்.

உயிருள்ள குதிரையை தானமாக வழங்கினால், வரிச் சலுகைக்கூட கிடைக்கும். ஆனால் குதிரைக்கு பாஸ்போர்ட் (Horse passport) இருக்க வேண்டும்.

இவ்வாறு வழங்கப்படும் உணவு “காடுகளில் இயற்கையாக வேட்டையாடுவதை விலங்குகளுக்கு நினைவூட்டுகிறது” என காட்டுயிர் சரணாலயம் கூறுகிறது.

By admin