6
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரமாக திரையில் தோன்றும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘தங்கரத்தினமே..’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் செல்வராகவன், குஷி ரவி, ஆர் எஸ் சதீஷ் ,கௌசல்யா, மைம் கோபி, வை. ஜி. மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், சுதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. பிரியன் இசையமைத்திருக்கிறார்.
எளிய மக்களின் வாழ்வியல் பின்னணியில் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வியோம் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விஜயா சதீஷ் மற்றும் ஆர் எஸ் சதீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘புருசனும் கூட ஒரு ஜோடி சேர்ந்து..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.