• Mon. Jun 23rd, 2025

24×7 Live News

Apdin News

செளதி, கத்தார், ஓமன் போன்ற இஸ்லாமிய நாடுகள் இரான் தாக்குதல் பற்றி கூறுவது என்ன?

Byadmin

Jun 22, 2025


கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் அதிபர் ஷாபாஸ் ஷெரீப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செளதி அரேபியா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகள் அமெரிக்கத் தாக்குதலை சர்வதேச சட்ட மீறல் என்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளன

இரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் – இரான் மோதலை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதுடன், இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்வினையையும் ஏற்படுத்தியுள்ளது.

செளதி அரேபியா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகள் அமெரிக்கத் தாக்குதலை சர்வதேச சட்ட மீறல் என்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளன.

அமெரிக்க தாக்குதலை விமர்சிக்கும் பல நாடுகளும், பதற்றங்களை உடனடியாகக் குறைத்து பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

By admin