• Sat. Mar 21st, 2026

24×7 Live News

Apdin News

செளதி, பஹ்ரைன், கத்தாரில் இரான் தொடர் தாக்குதல் – வளைகுடா நாடுகள் போரில் இணையுமா?

Byadmin

Mar 21, 2026


'பொறுமைக்கு எல்லை உண்டு': இரானுக்கு செளதி எச்சரிக்கை  - வளைகுடா நாடுகள் தாக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல்

இரானியர்கள் தங்கள் பாரசீக புத்தாண்டான நவ்ரூஸைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இரவு நேரத்தில் ஜெருசலேமிலும் இரானிய தலைநகர் தெஹ்ரானிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இரான் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் “தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மற்றொருபுறம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சௌதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தங்கள் மீது ஏவுகணை அல்லது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளன.

இரான் தொடர்ந்து முக்கிய உட்கட்டமைப்புகளைத் தாக்கினால், தாங்கள் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என இதுவரை இல்லாத அளவிலான வலுவான சமிக்ஞையை செளதி அரேபியா வெளிப்படுத்தியுள்ளது.

செளதியில் நடத்தப்பட்ட தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, செளதியில் நடத்தப்பட்ட தாக்குதல்

செளதி எச்சரிக்கை

”எங்களின் பொறுமைக்கு எல்லை உண்டு,” என்று கூறி இரனை செளதி வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் எச்சரித்தார்.

By admin