
தமிழ்நாடு – ஆந்திர எல்லையோர ஏரியில் சேற்றுக்குள் சிக்கிய யானை சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கந்தன் சரு என்ற இடத்தில் ஏரி ஒன்று ஆந்திரா மற்றும் தமிழக எல்லையோரம் அமைந்துள்ளது. காட்டில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக கந்தன் சரு வழியாக ஏரிக்கு வந்த யானை ஒன்று சேற்றுக்குள் சிக்கி எழ முடியாமல் போராடிக் கொண்டிருந்தது.
இதை பார்த்த
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் குடியாத்தம் வனத்துறையினர் அங்கே விரைந்தனர். அதேநேரத்தில், ஆந்திர வனத்துறையினரும் வந்து சேர, இரு மாநில வனத்துறையினரும் இணைந்து சேற்றில் சிக்கிய யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆறு மணி போராட்டத்திற்குப் பின்னர் யானையை அவர்கள் பத்திரமாக மீட்டு, ஏரி கரையோரம் கொண்டு வந்தனர். ஆந்திராவில் இருந்து இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து, அவற்றின் உதவியுடன் சேற்றில் சிக்கி காயம் அடைந்த யானை சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம் பலமனேரியில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.