• Mon. Dec 29th, 2025

24×7 Live News

Apdin News

சேலம்: 220 அடி நீளத்திற்கு தீண்டாமைச் சுவரா? பட்டியல் சமூக மக்கள் குற்றம் சாட்டுவது ஏன்?

Byadmin

Dec 29, 2025


சேலம் - தீண்டாமைச் சுவர்

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தொளசம்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ளது ஓலைப்பட்டி. இந்த ஊரில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில், இரண்டு அடி அகலம், பத்தடி உயரம், 220 அடி நீளத்தில் ஒரு பிரமாண்டமான கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இது தீண்டாமைச் சுவர் என்று ஒரு தரப்பாரும், இல்லை மாட்டுப் பண்ணை அமைக்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சுவர் என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். கள நிலவரத்தை அறிய பிபிசி தமிழ், ஓலைப்பட்டிக்கு நேரில் சென்றது.

ஆயிரம் வீடுகளைக் கொண்ட ஓலைப்பட்டியில் பட்டியல் சமூக மக்கள் நூறு குடும்பத்திற்கும் குறைவாகவே உள்ளனர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஊரின் கிழக்குப் பக்கம் 1.98 ஏக்கர் நிலத்தை பட்டியல் சமூக மக்களுக்கு வீடுகள் கட்ட மாநில அரசு ஒதுக்கிக் கொடுத்துள்ளது. மூன்று தெருக்களைக் கொண்ட இந்த இடத்தில், நாற்பது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடியிருப்புக்குப் பின்பக்கம் சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலமும், வலது பக்கம் பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலமும் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வலதுபக்க நிலத்தை விலைக்கு வாங்கிய பழனிசாமி, அந்த இடத்தில் மாட்டுப் பண்ணை அமைக்கப் போவதாகக் கூறி, பட்டியல் சமூக மக்கள் குடியிருப்புக்கும், தனது நிலத்திற்கும் இடையே ஒரு பிரமாண்டமான சுவரை எழுப்பியுள்ளார்.

‘காற்று வருவதற்கு வழிவிடுங்கள்’

ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை பணியாளர் தனம் இதுகுறித்துப் பேசும்போது, “இவ்வளவு பெரிய சுவர் வைக்க வேண்டாம். எங்கள் பகுதியிலுள்ள வீடுகளுக்குக் காற்றுகூட வராது. வழக்கமான சுற்றுச் சுவர்கள் உள்ளது போல் 5 அல்லது 6 அடி உயரத்திற்குச் சுவர் வைத்து, அதற்கு மேலே கம்பி வலை போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினோம்.

By admin