சைலண்ட் மாரடைப்பு என்பது இதயத்திற்கு ஆக்ஸிஜன் வழங்கும் கரோனரி நரம்புகள் குறுகுவதால் ஏற்படும் ஒரு மோசமான நிலையாகும். உடனடியாக கவனிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். உலகளவில் நிகழும் மாரடைப்புகளில் 22% முதல் 60% வரை சைலன்ட் ஹார்ட் அட்டாக் என கணிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மாரடைப்பின் போது நெஞ்சு வலி, மூச்சு திணறல், வியர்த்தல் போன்ற பல அறிகுறிகள் தோன்றும். ஆனால், சைலன்ட் ஹார்ட் அட்டாக்கில் அதிகமான அறிகுறிகள் இல்லாமலும் அல்லது சாதாரண அசௌகரியமாகவே தோன்றலாம். இதனால், பெரும்பாலானவர்கள் இதை பொருட்படுத்தாமல் விடுகிறார்கள்.
உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புகைபழக்கம், மன அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை இதற்குக் காரணமாகும். குறிப்பாக சர்க்கரை நோயாளர்களுக்கு இது கவனிக்கப்படாமல் போனால் பின்னர் சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்ற தீவிர பிரச்சினைகளாக மாறும்.
The post சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..! appeared first on Vanakkam London.