• Mon. Feb 23rd, 2026

24×7 Live News

Apdin News

“சோம்பேறித்தனம்” – இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி பற்றி பாகிஸ்தானில் விவாதிக்கப்படுவது என்ன?

Byadmin

Feb 23, 2026


 அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபிஷேக் சர்மா வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டி-20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் நிபுணர்கள் இது குறித்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகப் பயனர்களும் இந்தப் போட்டியைப் பற்றி வெளிப்படையாக விவாதித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் சிறப்பான ஆட்டம், இந்திய அணியின் சராசரி செயல்பாடு மற்றும் அபிஷேக் ஷர்மாவின் மோசமான ஃபார்ம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட விளம்பரம் ஒன்று இப்போது நீக்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவை தென்னாப்பிரிக்கா மோசமாகத் தோற்கடித்தது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் தென்னாப்பிரிக்கா சிறப்பாகச் செயல்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சிறப்பானது என்று குறிப்பிட்டதோடு, இந்தியாவின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதாகவும், அதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

By admin