• Wed. Nov 5th, 2025

24×7 Live News

Apdin News

சோழர் கால 103 தங்க காசுகள் பல்லாயிரம் அடி உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

Byadmin

Nov 5, 2025


திருவண்ணாமலை, ஜவ்வாது மலை, தங்க காசு, சோழர் காலம், பழமையான கோவில், கலசப்பாக்கம், கோவிலூர்
படக்குறிப்பு, தங்க காசுகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சிவன் கோயிலில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது தங்க புதையல் கிடைத்துள்ளது

திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில் அமைந்துள்ளது கோவிலூர் கிராமம்.

இங்கு பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கோவில் வளாகத்தை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்த நிலையில், தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக பள்ளம் தோன்றிய போது அதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட தங்க காசுகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

By admin