• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

சோழர் வரலாறு: 3ஆம் குலோத்துங்கன் ஆட்சியில் சிற்றரசர்கள் செய்துகொண்ட எல்லை ஒப்பந்தம் சொல்வது என்ன?

Byadmin

Oct 7, 2024


சோழர், சிற்றரசர், வரலாறு

தற்காலத்தில் அரசுகள் தங்களுக்குள் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதைப் போலவே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவும் அரசுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் பற்றி கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை நமக்குத் தருகின்றன.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு, இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது.

கி.பி.1178ஆம் ஆண்டு முதல் கி.பி.1218ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தவராகக் கருதப்படும் சோழ அரசரான மூன்றாம் குலோத்துங்கனுக்கு பல சிற்றரசர்கள் உறுதுணையாக இருந்தனர்.

கிளியூர் மலையமான், அதிகமான், இராசராசத்தேவன், அமராபரணன் சீயகங்கன், ராசராச வாணகோவரையன், வீரசேகர காடவராயன் போன்ற மன்னர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

By admin