• Mon. Mar 9th, 2026

24×7 Live News

Apdin News

சௌதி அரேபியாவுக்கு ஆதரவு தர இரானுக்கு எதிராக பாகிஸ்தான் களம் இறங்குமா?

Byadmin

Mar 9, 2026


இரான், பாகிஸ்தான், சௌதி அரேபியா

பட மூலாதாரம், X/@kbsalsaud

படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர், சௌதி அரேபிய பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் சந்திப்பு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர், சௌதி அரேபிய பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மானைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

சௌதி அரேபியாவின் ‘அராம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலை மீது இரான் தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. இதன்படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.

பாகிஸ்தான் இரானுடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது. பிபிசி உருது செய்தியின்படி, இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை பாகிஸ்தான் கண்டித்துள்ளது. இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதையும் அது கண்டித்துள்ளது.

ஆனால், இரானின் பதிலடி தாக்குதல்களுக்குப் பிறகு, சௌதி அரேபியாவிற்கு ஆதரவாக நிற்பதாக பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.

By admin