• Sun. Nov 24th, 2024

24×7 Live News

Apdin News

சௌதி அரேபியா: பெடோயின்கள் கைப்பற்றிய மெக்கா புனித தலம் மீட்கப்பட்டது எப்படி?

Byadmin

Nov 24, 2024


மெக்காவில் முஸ்லிம்களின் புனித  இடத்தை ஆயுதக் குழுவினர் கைப்பற்றிய போது நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தலையில் சிவப்பு வண்ணக் கட்டம் போட்ட துணியை கட்டிக்கொண்டு ஆயுதக் குழுவினர் மெக்காவுக்கு 1979, நவம்பர் 20இல் வந்தனர்.

  • எழுதியவர், ரெஹான் ஃபசல்
  • பதவி, பிபிசி ஹிந்தி

நவம்பர் 20, 1979. மொஹரத்தின் முதல் நாள் அன்று பாகிஸ்தான், இந்தோனீசியா, மொராக்கோ, ஏமன் நாட்டு யாத்ரீகர்களாலும் உள்ளூர் மக்களாலும், மெக்காவின் மிகப் பெரிய மசூதி நிரம்பி வழிந்தது.

தலையில் சிவப்பு வண்ணக் கட்டம் போட்ட துணி கட்டிய ஆயுதக் குழுவினரும் இந்தக் குழுவில் இருந்தனர்.

அவர்களில் சிலர் பல நாட்களாக அங்கே தங்கியிருந்து மசூதியை கண்காணித்து வந்தனர்.

பாதுகாப்புப் படையினருக்கு அவர்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகச் சிலர் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் காரில் சம்பவ நாளன்று மெக்காவுக்கு வருகை புரிந்தனர்.

By admin