• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

சௌதி அரேபியா லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க தீர்மானித்தது ஏன்?

Byadmin

Mar 7, 2026


சௌதி அரேபியா, ஒட்டகங்கள், பாஸ்போர்ட், விலங்குகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சௌதி அரேபியா, நாட்டின் மில்லியன் கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட்களை வழங்குகிறது (சித்தரிப்புப் படம்)

நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்போவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது.

ஒட்டகங்களை சிறந்த முறையில் வளர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சௌதி அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை ஒட்டக வளர்ப்பின் லாபத்தை அதிகரிக்கும் மற்றும் விலங்குகள் மற்றும் உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்கான நம்பகமான தரவுத்தளத்தை உருவாக்கும்.

2024-ஆம் ஆண்டில், சௌதி அரேபியாவில் சுமார் 2.2 மில்லியன் (22 லட்சம்) ஒட்டகங்கள் இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

இந்த ஒட்டகங்கள் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பொருளாதாரத்திற்கு இரண்டு பில்லியன் ரியாலுக்கும் மேல் பங்களிக்கின்றன.

By admin