• Wed. Oct 8th, 2025

24×7 Live News

Apdin News

சௌதி அரேபிய மன்னர் ஃபைசல் கடைசியில் என்ன ஆனார்? ஒரு மீள் பார்வை

Byadmin

Oct 8, 2025


சௌதி அரேபியா, மன்னர் ஃபைசல் படுகொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மேற்கத்திய நாடுகளை எதிர்த்த மன்னர் தனது மருமகனை வரவேற்றபோது அவராலேயே இறப்பைச் சந்தித்தார்.

    • எழுதியவர், லூயிஸ் ஹிடால்கோ
    • பதவி, பிபிசி உலக சேவை

“அந்த நாளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். என் அப்பாவின் வேதனையை நான் உணர்ந்தேன்.”

“தனது வழிகாட்டியும், ஆசிரியரும், நண்பருமான ஒருவருக்கு அருகில் ஒரு மனிதன் நிற்கிறான். அப்போது அவர் அருகில் சுடப்படுகிறார். அந்தச் சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்,” என்று பிபிசியிடம் கூறுகிறார் முனைவர் மாய் யமானி.

1975-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தைத் தான் முனைவர் மாய் நினைவு கூர்ந்தார்.

அன்று சௌதி அரேபியாவின் மன்னர் ஃபைசல், தனது மருமகனை வரவேற்கும்போது, ​​மூன்று முறை சுடப்பட்டார்.

By admin