• Sun. Jan 11th, 2026

24×7 Live News

Apdin News

சௌதி – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பதற்றம் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு என்ன பிரச்னை?

Byadmin

Jan 10, 2026


சௌதி அரேபியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரா ஹஸன்
    • பதவி, பிபிசி உருது சேவை

ஏமனில் நீடிக்கும் உள்நாட்டுச் சண்டையில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக சௌதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான மோதலின் தீவிரம் சற்று தணிந்து வருவதாகத் தெரிகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் குறைவது தற்காலிகமானதாக இருக்கலாம் என்றும் எதிர்காலத்தில் வேறு ஏதேனும் ஒரு விவகாரத்தில் இது மீண்டும் தலைதூக்கக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில், சௌதி அரேபியா தலைமையிலான கூட்டணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்களைக் குறிவைத்து ஏமனில் ஒரு வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து, ஏமன் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது படைகளை 24 மணிநேரத்திற்குள் திரும்பப் பெற வேண்டும் என்று சௌதி அரேபியா வலியுறுத்தியது.

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்ததுடன், தனது படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது.

By admin