• Wed. Aug 27th, 2025

24×7 Live News

Apdin News

சௌதி விமான விபத்து: ‘பணியாளர்களின் தாமதமான முடிவால்’ 301 பேர் உயிரிழந்த கதை

Byadmin

Aug 27, 2025


சவுதி ஏர்லேன்ஸ் லாக்ஹீட் L-1011 ட்ரை ஸ்டார் விமானம் விபத்துக்குள்ளானது

பட மூலாதாரம், Federal Aviation Administration

படக்குறிப்பு, சவுதி ஏர்லேன்ஸ் லாக்ஹீட் L-1011 ட்ரை ஸ்டார் விமானம் விபத்துக்குள்ளானது

சௌதி ஏர்லைன்ஸ் 163 எனும் விமானத்தின் 38 வயதான கேப்டன் முகமது அலி காய்தர், மயக்க நிலையில் இருந்ததால் காக்பிட்டில் (விமானி அறை) பாடலை முணுமுணுத்தாரா அல்லது பதற்றத்தால் அரேபிய மொழியில் பிரார்த்தனை செய்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆனால், இவரைத் தவிர காக்பிட்டில் இருந்த முதல் அதிகாரி சமி ஹாஸ்னைன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விமான பொறியாளர் ப்ராட்லி கூர்டிஸ் என இவர்கள் இருவரும் நிலைமை கைமீறிவிட்டதை உணர்ந்தனர்.

அது 1980ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19ஆம் தேதி மதிய நேரம். அப்போது அதிநவீனமான அமெரிக்கன் லாக்ஹீட் ட்ரை-ஸ்டார் விமானம் பறக்கத் தொடங்கியது.

தொடக்கத்தில் அனைத்தும் நன்றாகவே இருந்தது. 301 பேரின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு போக்குவரத்துத் துறையில் நடந்த மிக மோசமான விபத்தாக இது இருக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

By admin