• Thu. Jan 8th, 2026

24×7 Live News

Apdin News

ஜனநாயகன்: சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் என்ன சிக்கல்? – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Byadmin

Jan 6, 2026


ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் சிக்கல்

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

நடிகர் விஜயின் கடைசி படமாகக் கருதப்படும் ஜனநாயகன் படத்துக்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால், படக்குழு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன நடந்தது?

ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் சிக்கல்: என்ன நடந்தது?

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரியும் KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.

By admin