• Tue. Oct 8th, 2024

24×7 Live News

Apdin News

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் கையொப்பம்

Byadmin

Oct 8, 2024


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் சங்கு சின்னத்தில்  போட்டியிடவுள்ளார்.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்றைய தினம் திங்கட்கிழமை (7) சசிகலா ரவிராஜ் கையொப்பமிட்டார்.

இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியில் போட்டியிட்ட நிலையில், இம்முறை அக்கட்சி அவருக்கு ஆசனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By admin