• Fri. Nov 22nd, 2024

24×7 Live News

Apdin News

ஜனாதிபதி முன்னிலையில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

Byadmin

Nov 22, 2024


புதிய அரசின் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

01. பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் – அனில் ஜயந்த பெர்னாண்டோ

02. விவசாயம் மற்றும் கால்நடைவளங்கள் பிரதி அமைச்சர் –  நாமல் கருணாரத்ன

03. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் – வசந்த பியதிஸ்ஸ

04. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் – அருண் ஹேமச்சந்திரா

05. தொழிற்கல்வி பிரதி அமைச்சர் – நளின் ஹேவகே

06. வர்த்தக, வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி அமைச்சர் – ஆர்.எம் ஜயவர்த்தன

07. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் –  கமகெதர திஸாநாயக்க

08. வீடமைப்பு பிரதி அமைச்சர் – டி.பி சரத்

09. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் – ரத்ன கமகே

10 தொழில் பிரதி அமைச்சர் – மஹிந்த ஜயசிங்க

11. பாதுகாப்பு பிரதி அமைச்சர் – அருண ஜயசேகர

12. சுற்றாடல்துறை பிரதி அமைச்சர்  – எண்டன் ஜயக்கொடி

13. தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் – மொஹமட் முனீர்

14. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் – பொறியிலாளர் எரங்க வீரரத்ன

15. இளைஞர் விவகார பிரதி அமைச்சர் –  எரங்க குணசேகர

16. கைத் தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் – சத்துரங்க அபேசிங்ஹ

17. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் – பொறியிலாளர் ஜனித் ருவன் கொடித்துவக்கு

18. மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் –  வைத்தியர் நாமல் சுதர்ஷன

19. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் – ருவன் செனரத்

20. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் – வைத்தியர் பிரசன்ன குமார குணசேன

21.சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் –  வைத்தியர் ஹங்சக்க விஜேமுனி

22. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் – சுந்தரலிங்கம் பிரதீப்

23. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் – உபாலி சமரசிங்க

24. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் – சுகத் திலகரத்ன

25. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் – ருவன் சமிந்த ரணசிங்க

26. பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் – சட்டத்தரணி சுனில் வட்டகல

27. கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் – கலாநிதி மதுர செனவிரத்ன

28.  நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் – கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும

29.  காணி மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் –  கலாநிதி சுசில் ரணசிங்க

The post ஜனாதிபதி முன்னிலையில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்! appeared first on Vanakkam London.

By admin