• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

ஜன நாயகன் தாமதம்: பாஜக, காங்கிரஸ், திமுக மற்றும் திரை உலகம் கூறுவது என்ன?

Byadmin

Jan 8, 2026


ஜன நாயகன் வெளியாவதில் தாமதம்: அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், KVN Productions

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கடைசி திரைப்படமாக கருதப்படும் ஜன நாயகன் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தணிக்கை தொடர்பான சிக்கல்களால் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் ஜனவரி 7ஆம் தேதி அறிவித்தது.

இதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் ஜன நாயகன் படம் குறித்தும் விஜய் குறித்தும் தங்களது கருத்துகளையும் ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

யார், யார் என்ன கூறியுள்ளார்கள்? இங்கு விரிவாகக் காண்போம்.

காங்கிரஸ் தலைவர்கள் கூறியது என்ன?

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இப்போது திரைத்துறை குறிவைக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது.

By admin