• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

ஜன நாயகன் போல வெளியாகும் முன் சிக்கலை சந்தித்த 4 விஜய் திரைப்படங்கள் எவை?

Byadmin

Jan 8, 2026


ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் சிக்கல்

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜன நாயகன்’ திரைப்படம், தணிக்கை தொடர்பான சிக்கல்களால் வெளியாகும் தேதி தள்ளிப் போடப்பட்டுள்ளது. இதுபோல, இதற்கு முன் வெளியாவதில் சிக்கல்களைச் சந்தித்த விஜயின் திரைப்படங்கள் எவை? என்ன காரணம்?

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில திரையரங்குகளில் முன்பதிவுகளும் துவங்கப்பட்டன.

ஆனால், இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது.

இந்த வழக்கில் நாளை (ஜனவரி 9) தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், ஜன நாயகன் படத்தின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டு இருப்பதாக படத்தைத் தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் ஜனவரி 7ஆம் தேதியன்று இரவில் அறிவித்தது.

விஜய் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் வெளியீட்டின்போது சிக்கலைச் சந்திப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் அவரது படங்கள் பல்வேறு காரணங்களால் சிக்கலைச் சந்தித்திருக்கின்றன.

By admin