1
ஜப்பானிய பிரதமர் சானே தக்காயிச்சி (Sanae Takaichi) எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைத்து திடீர்த் தேர்தலை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 8ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரம், இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கக்கூடும்.
தக்காயிச்சி தலைமையிலான ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி (Liberal Democratic Party) ஜப்பானில் நீண்ட காலமாக ஆட்சி புரிந்து வருகிறது. இருப்பினும், அந்தக் கட்சி அடிக்கடி தலைமைத்துவ மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் பிரதமர் பொறுப்பை ஏற்ற தக்காயிச்சி, தாம் அந்தப் பதவிக்குத் தகுதியானவரா என்பதை நாட்டு மக்களிடம் நேரடியாக கேட்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது வரவுசெலவுத் திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலும் இந்தத் தேர்தல் அறிவிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.