0
ஜப்பானியப் பிரதமர் சனே தக்காயிச்சி (Sanae Takaichi), நாடாளுமன்றத்தின் கீழவையை கலைத்து திடீர்த் தேர்தலை அறிவித்துள்ளார். இதன்படி, அடுத்த மாதம் 8ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 465 நாடாளுமன்ற இடங்களுக்கான போட்டி இதில் இடம்பெறுகிறது.
தமது ஆளுங்கட்சியின் மீது மக்களிடையே நம்பிக்கை குறைந்துள்ள சூழலில், அமைச்சரவைக்கு கிடைக்கும் மக்களின் ஆதரவை மறுபடியும் உறுதி செய்வதற்காக இந்தத் திடீர்த் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தக்காயிச்சி, ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி – ஜப்பானில் திடீர் தேர்தல்: நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் சானே தக்காயிச்சி முடிவு
மேலும், நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு ஆதரவைத் திரட்டுவதே இந்தத் தேர்தலின் முக்கிய நோக்கமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.