• Fri. Jan 24th, 2025

24×7 Live News

Apdin News

ஜப்பான்: மனிதர்களைக் காணாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூரியமீன், மீண்டும் புத்துணர்வு பெற உதவிய வினோத யுக்தி

Byadmin

Jan 24, 2025


சூரிய மீனின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான 'கடைசி முயற்சி'

பட மூலாதாரம், Kaikyokan

படக்குறிப்பு, இந்த நடவடிக்கை சூரிய மீனின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ‘கடைசி முயற்சி’ காட்சிசாலை நிர்வாகம் கூறுகிறது

ஜப்பானில் ஒரு மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டபோது, அங்கு இருந்த ஒரு சூரிய மீனுக்கு (Sunfish) அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காரணம், வழக்கம்போல மனித முகங்களை அல்லது பார்வையாளர்களை அதனால் பார்க்க முடியவில்லை என்பதால்.

இப்போது அந்த மீனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வழக்கத்திற்கு மாறான ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் யமகுச்சி மாகாணத்தின் ஷிமோனோசெகியில் உள்ள கைக்யோகன் மீன் காட்சியகம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், சூரிய மீன் நீந்தும் பகுதியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட சீருடைகளுக்கு மனித முகங்களின் முகமூடிகள் இணைக்கப்பட்டு, நிறுத்திவைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

இந்த நடவடிக்கை சூரிய மீனின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ‘கடைசி முயற்சி’ என்றும், தனிமையின் காரணமாக மீனுக்கு இத்தகைய பிரச்னை ஏற்பட்டது என ஒரு ஊழியர் கண்டறிந்ததாகவும், இந்த மாத தொடக்கத்தில் கைக்யோகன் மீன் காட்சியகம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தது.



By admin