• Wed. Feb 12th, 2025

24×7 Live News

Apdin News

ஜமைக்கா: திருநெல்வேலி பொறியியல் பட்டதாரிக்கு ஜமைக்கா சூப்பர் மார்க்கெட்டில் என்ன நடந்தது?

Byadmin

Feb 10, 2025


ஜமைக்கா, நெல்லை, தமிழ்நாடு அரசு, இந்திய தூதரகம்
படக்குறிப்பு, விக்னேஷின் உடலை தாயகம் எடுத்து வருவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சூப்பர் மார்கெட் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், கடையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு, அங்கு வேலை செய்துவந்த நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் (31) என்ற இளைஞரை சுட்டு கொன்றுவிட்டு தப்பினார். இந்த கொள்ளை சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது.

விக்னேஷின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு எடுத்து வர வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், உடலை தாயகம் எடுத்து வருவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரியான விக்னேஷ் உயிரிழந்தது எப்படி? சூப்பர் மார்க்கெட்டில் என்ன நடந்தது? உடன் பணியாற்றியவர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்திய தூதரகம் கூறுவது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜமைக்காவில் நடந்தது என்ன?

ஜமைக்கா நாட்டின் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவில் (Turks and Caicos Islands) உள்ள லீ ஹை ரோடு என்ற பகுதியில் நெல்லையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான ஜிகே ஃபுட் என்ற சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

By admin