ஜம்மு காஷ்மீரில் குண்டுவீச்சு – நேரடி சாட்சிகளின் அதிர்ச்சி தகவல்கள்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் நகரில் குண்டுவீச்சுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் மீது இந்தியா 7ம் தேதி நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பூஞ்ச் நகர் மீது குண்டுகள் வீசப்பட்டன.
கடந்த பல ஆண்டுகளாக பூஞ்ச் நகருக்கு அருகில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் குண்டுவீச்சுகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை பூஞ்ச் நகரில் குண்டுவீச்சுகள் நடைபெற்றுள்ளன.
எனவே இப்பகுதியில் வசிப்பவர்கள் இங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
பூஞ்ச் நகரிலிருந்து பிபிசி செய்தியாளர் ராகவேந்திர ராவ் வழங்கும் கள தகவல்களையும் அப்பகுதியினரின் பேட்டிகளையும் இந்த வீடியோவில் காணலாம்.