• Tue. Apr 22nd, 2025

24×7 Live News

Apdin News

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு

Byadmin

Apr 22, 2025


ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், PTI

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது இன்று (ஏப்ரல் 22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதக் குழு நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது என்று இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு ராணுவமும் காவல்துறையும் அனுப்பப்பட்டுள்ளதாக பிராந்தியத்தின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​தெரிவித்தார்.

By admin