• Wed. Apr 23rd, 2025

24×7 Live News

Apdin News

ஜம்மு காஷ்மீர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் பற்றி பாகிஸ்தானியர்கள் கூறுவது என்ன?

Byadmin

Apr 23, 2025


ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்தவர்கள் அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு நடைபெற்றுள்ள மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக சௌதி அரேபியாவில் இருந்த போது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவில் இருக்கும் சமயத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை அடுத்து, தனது சௌதி அரேபியா பயணத்தின் நடுவில் பிரதமர் மோதி டெல்லி திரும்பிவிட்டார்.

அண்மையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வேறுபாட்டை குறிப்பிட்டு, உலகின் எந்த சக்தியாலும் காஷ்மீரை பாகிஸ்தானிலிருந்து பிரிக்க முடியாது என்று கூறியிருந்ததும் இந்தத் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ள சமயத்தில் கவனம் பெறுகிறது.

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து பல்வேறு வகையான எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித் தெரிவித்துள்ள கருத்துகளும் தற்போது முக்கியத்துவம் பெறுகின்றன.

By admin