• Tue. Oct 8th, 2024

24×7 Live News

Apdin News

ஜம்மு காஷ்மீர், ஹரியாணா வாக்கு எண்ணிக்கை நேரலை – அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்?

Byadmin

Oct 8, 2024


ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியாணா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சனிக்கிழமை (அக்டோபர் 5) வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியாணாவில் இன்று (அக்டோபர் 8) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதுபற்றிய நேரடித் தகவல்களை உடனுக்குடன் பிபிசி தமிழ் வழங்குகிறது.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்

90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த பத்து ஆண்டுகளில் முதன் முறையாக இங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கே நடைபெறும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாயின.



By admin