• Wed. Jan 15th, 2025

24×7 Live News

Apdin News

ஜல்லிக்கட்டு வரலாறு என்ன? – தமிழ் அடையாளமாக மாறியது எப்படி?

Byadmin

Jan 15, 2025


ஜல்லிக்கட்டின் வரலாறு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காளைகளின் மதிலைப் பிடித்துத் தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் வரை செல்லும் இந்த வடிவமே, ஜல்லக்கட்டின் பிரபல வடிவமாக இருக்கிறது

பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விளையாடப்படும் ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீர விளையாட்டாக முன்வைக்கப்படுகிறது. இந்த விளையாட்டின் வரலாறு என்ன?

தை மாதம் பிறந்த பிறகு மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.

மாடு பிடிக்கும் விளையாட்டு, பொதுவாக ஜல்லிக்கட்டு எனக் குறிப்பிடப்பட்டாலும் இது விளையாடப்படும் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் பொதுவாக ஜல்லிக்கட்டு என்ற பெயரிலும் ராமநாதபுரத்தில் எருது கட்டு, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் மஞ்சு விரட்டு என இந்த விளையாட்டுகள் நடக்கின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன.

By admin