• Wed. Jan 8th, 2025

24×7 Live News

Apdin News

ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா: இந்தியா – கனடா இருநாட்டு உறவு மேம்படுமா? ஓர் அலசல்

Byadmin

Jan 7, 2025


இந்தியா - கனடா, ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் தன்னை ஒரு போராளி என்று அழைத்தார்.

  • எழுதியவர், ஹிமான்ஷு துபே மற்றும் அபய் சிங்
  • பதவி, பிபிசி நிருபர்

கனடா, உலகம் முழுவதுமே தற்போது தலைப்புச் செய்தியாக உள்ளது. அதற்கு காரணம் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவர் பிரதமர் பதவி மற்றும் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து திங்கள்கிழமை (ஜனவரி 7) ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

தான் பதவி விலகுவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ அறிவித்தார். கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பிரதமர் பதவியை விட்டு விலகுவதாகவும் அவர் கூறினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமா இந்தியாவில் என்ன விளைவை ஏற்படுத்தும்? இதில் இந்தியா மகிழ்ச்சி அடைய வேண்டுமா? லிபரல் கட்சியின் புதிய தலைவர் இந்தியாவிடம் எவ்வாறு நடந்து கொள்வார்? போன்ற சில கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, சர்வதேச அரசியல் விவகாரங்கள் குறித்த நிபுணர்களுடன் பிபிசி உரையாடியது.

ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய பிறகு கனடாவுக்கும் இந்தியாவுக்குமான வெளியுறவு மேம்படுமா? ஓர் அலசல்

By admin