• Mon. Nov 17th, 2025

24×7 Live News

Apdin News

ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா: ரூ.100 லஞ்ச வழக்கால் 39 ஆண்டு இன்னலை அனுபவித்த ஒருவரின் துயரக் கதை

Byadmin

Nov 17, 2025


ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா

பட மூலாதாரம், Alok Putul

    • எழுதியவர், ஆலோக் புதுல்
    • பதவி, பிபிசி இந்திக்காக

ராய்ப்பூரின் அவதியா பாராவின் வளைந்த குறுகிய தெருக்களில், ஒரு பழைய வீடு இருக்கிறது. சுமார் 84 வயதான ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா அந்த வீட்டில்தான் வசிக்கிறார்.

இந்த வீட்டின் பாழடைந்த சுவர்களில் பெயர்ப் பலகைகள் ஏதுமில்லை, வெற்றியின் அறிகுறிகள் ஏதுமில்லை. ஆனால் இந்த சுவர்களால் பேச முடிந்தால், ஒரு மனிதர் 39 ஆண்டுகள் நீதியின் கதவைத் தட்டிய கதையை அவை சொல்லும். அந்தக் கதவு இறுதியில் திறந்தபோது, அவரது வாழ்க்கையின் பெரும்பாலான ஜன்னல்கள் ஏற்கனவே மூடியிருந்தன.

பிளவுபடாத முந்தைய மத்தியப் பிரதேசத்தின் மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் எழுத்தராகப் பணியாற்றிய ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா, 1986-ல் 100 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சுமார் 39 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் அவரை தற்போது மரியாதையுடன் விடுதலை செய்திருக்கிறது.

சமூக அமைப்பின் அலட்சியத்துக்கு, தாமதமான நீதிக்கு, உடைந்துபோன ஒரு மனிதனின் நம்பிக்கைக்கு அடையாளமாக மாறியுள்ள ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா, “இந்த முடிவில் இப்போது எந்த அர்த்தமும் இல்லை. என் வேலை போய்விட்டது. சமூகம் என்னைப் புறக்கணித்துவிட்டது. என் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை. உறவினர்கள் என்னை விலக்கி வைத்துவிட்டனர். சிகிச்சை கிடைக்காததால் என் மனைவி இறந்துவிட்டாள். என் கடந்த காலத்தை யாராவது எனக்கு மீண்டும் கொடுக்க முடியுமா?” என்று கேட்கிறார்.

By admin