• Sun. Jul 12th, 2026

24×7 Live News

Apdin News

ஜானகி காலமானார்: தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் – இளையராஜா கூறியது என்ன?

Byadmin

Jul 12, 2026


எஸ்.ஜானகி மறைவு

பட மூலாதாரம், X/S Janaki

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

மறைந்த பின்னணி பாடகி ஜானகியின் உடலுக்கு தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மைசூரியில் உயிரிழந்த அவரது உடல் அங்குள்ள மகாராஜா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி கூறுகிறது. அங்கு பொதுமக்கள் திரளானோர் வந்து ஜானகி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாலை 4 மணி வரை அங்கே பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். மாலை 5 மணியளவில் ஜானகி உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும்.

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

எஸ்.ஜானகி மறைவு

பட மூலாதாரம், ANI

ஜானகியின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

By admin