0
நடிகர்கள் ஜீவா – அர்ஜுன் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘அகத்தியா’ எனும் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாடலாசிரியரும் , இயக்குநரும் , நடிகருமான பா . விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அகத்தியா ‘ எனும் திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா ,யோகி பாபு ,ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் வாம் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் அனீஸ் அர்ஜுன் தேவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
கடந்த மாதம் 31-ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நிறைவடையாததால் தற்போது இம்மாதம் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
பட மாளிகையில் ‘அகத்தியா’ படத்தை காண்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக சர்வதேச தொழில்நுட்பத்துடனான உருவாக்கலில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகவே இத்திரைப்படம் இம்மாதம் வெளியாகிறது என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.