• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

ஜீவா நடிக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Byadmin

Oct 2, 2025


தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஜீவா நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு, ‘தலைவர் தம்பி தலைமையில் ‘ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனும் திரைப்படத்தில் ஜீவா, பிரார்த்தனா நாதன், மீனாட்சி தினேஷ், தம்பி ராமையா, இளவரசு, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை கே ஆர் குரூப் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்பிற்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.  விரைவில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin