• Fri. Jun 5th, 2026

24×7 Live News

Apdin News

ஜீஷான்: பாகிஸ்தான் இளைஞர் இந்தியக் காதலியைச் சந்திக்க எல்லையைக் கடந்தது எப்படி?

Byadmin

Jun 5, 2026


பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த ஜீஷான் என்ற இளைஞர் மாயமானது குறித்து அவரது தந்தை உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்

பட மூலாதாரம், Social Media

படக்குறிப்பு, ஜீஷான் என்ற இளைஞர் மாயமானது குறித்து அவரது தந்தை உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்

    • எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர், ஷஹ்ஸாத் மாலிக், நசீர் சௌத்ரி
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பாகிஸ்தானின் ஹவேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரின் வீடியோ பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (எல்ஓசி) அப்பால் இந்திய பாதுகாப்புப் படையினரின் காவலில் இருப்பது காட்டப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மாவட்ட எஸ்எஸ்பி ஜிபி சிங், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் இந்திய ராணுவத்தின் காவலில் இருப்பதை பிபிசி உருதுவிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.

மறுபுறம், இந்திய எல்லை அருகில் உள்ள பாகிஸ்தான் ஹவேலி மாவட்ட துணை ஆணையர் தாரிக் மஹ்மூத், ”ஜீஷான் என்ற இளைஞர் மாயமானது குறித்து அவரது தந்தையின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்றார்.

போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஜீஷானின் நண்பர்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களிடம் தகவல் சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண் மீதான காதலால், இந்த இளைஞர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்ததாகவும், அங்கு அவர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

By admin