0
உலக அளவில் ஆங்கில மொழியை வணிக மொழி என்றும், ஜேர்மன் மொழியை அறிவியல் மொழி என்றும், தமிழை பக்தி மொழி என்றும் முன்னோர்கள் – தமிழறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் பக்தி இலக்கியங்களுக்கு பாரிய இடம் உண்டு.
இதில் ‘ஒரு வாசகத்திற்கும் உருகாதவர்கள் திருவாசகத்திற்கு உருகுவார்கள்’ என்றொரு சிறப்பைப் பெற்ற பக்தி இலக்கியம் திருவாசகம். இதில் இடம்பெற்ற பாடல்கள் ஜென் ஜீ தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் நவீனத்துவமான இசை வடிவில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் உருவாக்கி இருக்கிறார். இந்த பாடலை அவருடைய பிரத்யேக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
‘ நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
எனும் சைவ சமய குரவர்களின் ஒருவரான மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பாடலை பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியிருக்கிறார்.
இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வின்போது இந்தப் பாடலை ஜீ. வி. பிரகாஷ் குமார் – பாரத பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்நிலையில் இந்தத் பக்தி பாடல் அல்பம் இசை ரசிகர்களை கடந்து ஆன்மீக அன்பர்கள் அனைவரிடத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.