• Mon. Dec 8th, 2025

24×7 Live News

Apdin News

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ் ‘ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Byadmin

Dec 7, 2025


முன்னணி இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஹேப்பி ராஜ்’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹேப்பி ராஜ்’ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், ஸ்ரீ கௌரி பிரியா , அப்பாஸ்,  ஜார்ஜ் மரியம், பிரார்த்தனா , அருண், மதுரை முத்து,  ரசூல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். அசலான மகிழ்ச்சியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பியான்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெய்வர்தா தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”சமூக வலைதளங்களில் பெரும்பாலான தருணங்களை கழிக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் எதிர்மறையான விடயங்களால் அசலான மகிழ்ச்சிமிக்க தருணங்களை தவற விடுகிறார்கள். இவர்கள் தவற விடும் மகிழ்ச்சியை பார்வையாளர்களுக்கு கடத்தும் வகையில் இப்படத்தில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

இதனிடையே இப்படத்தின் டைட்டிலை முத்திரை போல் வடிவமைத்து.. அதனை ஆண்கள் அணியும் அணிகலனாக  உருவாக்கி இருப்பது.. ஒரு சில பிரிவு ரசிகர்களை வசீகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin