3
‘ஹேப்பி ராஜ் ‘ படத்தின் வணிக ரீதியான மற்றும் விமர்சன ரீதியான வெற்றிக்கு பிறகு இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
‘ஜோ’ வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஜீ வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மனோஜ் நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் யுனிவர்ஸ் பேரலல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘கருடன்’, ‘மாமன் ‘ஆகிய வெற்றி படங்களை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனமும், ஜீ.வி. பிரகாஷ் குமாரின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் கூட்டணி அமைத்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.