1
நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான சூர்யா விஜய் சேதுபதி கதையின் நாயகனாக – கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ வீழான் ( Phoenix) எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றிய அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகும் ‘ வீழான் ( Phoenix) எனும் இந்த படத்தில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், முத்துக்குமார், சம்பத்ராஜ், ஹரிஷ் உத்தமன், அபி நட்சத்திரா, வர்ஷா விஸ்வநாத், திலீபன் உள்ளிட்ட படர் நடித்திருக்கிறார்கள்.
ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை AK பிரேவ்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராஜலக்ஷ்மி அனல் அரசு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. கடந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து எதிர்வரும் ஜூலை மாதம் நான்காம் திகதி அன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய் சேதுபதியின் வாரிசு என்பதாலும், படத்தினை விளம்பரப்படுத்துவதற்கு விஜய் சேதுபதி கால்ஷீட் ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளதாலும் இப்படம் திட்டமிட்டபடி ஜூலை மாதம் வெளியாகும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.