• Sun. Aug 3rd, 2025

24×7 Live News

Apdin News

ஜூஸ் டயட்டில் இருந்தவர் மரணம் : உணவுக் கட்டுப்பாட்டில் செய்யக் கூடாத தவறுகள் என்ன?

Byadmin

Aug 3, 2025


உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், உடல்நலம், டயட்

பட மூலாதாரம், Getty Images

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த 17 வயதான சக்தீஸ்வரன் என்கிற இளைஞர் கடந்த மே 24 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர காத்திருந்த சக்தீஸ்வரன் உடற்பயிற்சியிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

அவரின் இறப்பு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சக்தீஸ்வரன் கடந்த சில மாதங்களாக இணையத்தில் அறிமுகமான சில திரவ உணவுமுறையைப் (டயட்) பின்பற்றி வந்ததாக அவர்களின் பெற்றோர் கூறியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, உடல்நலன் சார்ந்த காரணங்களுக்கான டயட் எடுத்துக் கொள்பவர்கள் முறையான ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

By admin