• Wed. Feb 4th, 2026

24×7 Live News

Apdin News

ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்? உலகின் சக்திவாய்ந்த நபர்களுடன் அவருக்கு தொடர்பு வந்தது எப்படி?

Byadmin

Feb 4, 2026


பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளில் விசாரணைக்காக ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர் இழந்தார்.

பட மூலாதாரம், US Department of Justice

படக்குறிப்பு, ஜெஃப்ரி எப்ஸ்டீன்

‘நான் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் நபர் அல்ல.. குற்றம் செய்த நபர் மட்டுமே. ஒரு கொலைகாரனுக்கும், ஒர் உணவுப்பொருளை திருடுபவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது இது” என்று 2011-ல் நியூயார்க் போஸ்ட் இதழிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கூறினார்.

பாலியல் தேவைகளுக்காக ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர் இழந்தார்.

ஒரு சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதற்காக அவர் தண்டிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாக அவர் பதிவு செய்யப்பட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது.

சிறுமிகளை பாலியல் உறவுக்காக பயன்படுத்தும் “பெரிய வலையமைப்பு” ஒன்றை நடத்தினார் என அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

நவம்பர் 2025-ல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தை’ பெருமளவில் அங்கீகரித்தன.

By admin