• Sun. Oct 13th, 2024

24×7 Live News

Apdin News

ஜெனரல்ஸ் திட்டம்: இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவில் என்ன செய்ய திட்டமிடுகிறது? ஓர் அலசல்

Byadmin

Oct 13, 2024


இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வடக்கு காஸாவை படிப்படியாக சிதைக்க இஸ்ரேலிய ராணுவம் ஒரு புதிய தந்திரத்தை பின்பற்றுகிறதோ என்று ஐ.நா.வும் பாலத்தீனர்களும் சந்தேகிக்கின்றனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் (IDF) அரபு மொழி செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை காலை சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில் அவர் வடக்கு காஸாவில் உள்ள “D5” பகுதியில் வசிப்பவர்களை தெற்கே செல்லுமாறு எச்சரித்தார். “D5” என்பது பத்திற்கும் மேற்பட்ட சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்ட ஒரு மண்டலம்.

இந்த அறிவிப்பில், “பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் (IDF) பெரும் சக்தியுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலத்திற்கு அதன் செயல்பாடுகள் தொடரும். அங்கு அமைந்துள்ள முகாம்கள், குடியிருப்பு பகுதி என அனைத்தும் ஆபத்து ஏற்படும் இடங்களாக கருதப்படுகிறது. இங்குள்ள மக்கள் சலாஹ் அல்-தின் சாலை வழியாக மனிதாபிமானப் பகுதிக்கு உடனடியாக செல்ல வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு செய்தியுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு வரைப்படத்தில், D5 மண்டலத்திலிருந்து ஒரு பெரிய மஞ்சள் அம்புக்குறி தெற்கு காஸாவை நோக்கி வரையப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலத்தீனம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சலாஹ் அல்-தின் நெடுஞ்சாலை வடக்கு-தெற்கு பயணங்களுக்கு முக்கிய பாதையாகும். D5 பகுதி ஒரு வருடமாக தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இம்முறை வெளியான அறிவிப்பை பார்க்கும் போது, இப்பகுதி மக்கள் மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியும் என்பதை உறுதியளிக்கவில்லை.

By admin