• Wed. Feb 4th, 2026

24×7 Live News

Apdin News

ஜெனரல் நரவனே யார்? அவரின் வெளியாகாத புத்தகம் குறித்து நிலவும் சர்ச்சை என்ன?

Byadmin

Feb 4, 2026


ஜெனரல் எம்.எம். நரவனே டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022 வரை இந்திய ராணுவத்தின் 28வது முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெனரல் எம்.எம். நரவனே

திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் உரையால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் (எம்எம்) நரவனே எழுதிய வெளியாகாத புத்தகம் (ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி) குறித்து கேரவன் இதழில் வெளியான கட்டுரையின் சில பகுதிகளை ராகுல் காந்தி வாசிக்க முயன்றார்.

ராகுல் காந்தி திங்கட்கிழமை மக்களவையில் பேசுகையில், “அந்த கட்டுரையில் நரவனே, தன்னுடைய நினைவுக்குறிப்பான அப்புத்தகத்தை வெளியிட அரசு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அக்கட்டுரையிலிருந்து ஐந்து வரிகளை மட்டும் வாசிக்க நான் விரும்புகிறேன்.” என தெரிவித்தார்.

வெளியாகாத புத்தகம் ஒன்றின் பகுதிகளை எப்படி வாசிக்கலாம் எனக்கூறி பாஜக தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆளும்கட்சியினரை பார்த்து ராகுல் காந்தி, “பயங்கரவாதத்தை எதிர்த்து சண்டையிடுவதாக அவர்கள் (ஆளுங்கட்சியினர்) கூறுகின்றனர், ஆனால் ஒருவர் கூறிய மேற்கோள் குறித்து அஞ்சுகின்றனர். அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவர்களை பயமுறுத்துகிறது, என்னால் பேச முடியவில்லை. அவர்களுக்கு அச்சமில்லை என்றால் என்னை வாசிக்க அனுமதிக்கட்டும்.” என்றார்.

By admin